இன்னும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்? சர்ஃபராஸ் கான்

Sarfaraz Khan: “இன்னும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்?” என இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து சர்ஃபராஸ் கான் வேதனை தெரிவித்துள்ளார்.

Published on: November 3, 2026 at 2:45 pm

புதுடெல்லி, நவ.3, 2026: இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் கிடைக்காதது குறித்து மும்பை கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கான் தனது அதிருப்தியையும் வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார். ரயில்வேஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியின்போது பேசிய அவர், ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணிக்கே எழுந்து பயிற்சி மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடியும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால், இன்னும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும் என்ற கேள்வி தனக்குள் எழுவதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது உடல் எடையை 97 கிலோவிலிருந்து 77 கிலோவாகக் குறைத்ததுடன், உடற்தகுதியிலும் அதிக கவனம் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக விளையாட முடியாது என்ற பார்வை தன் மீது இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இந்தியா ஏ அணிக்காக விளையாடியபோது சதம் அடித்துள்ளதையும் சுட்டிக்காட்டிய அவர், வெளிநாடுகளிலும் ரன்கள் குவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது தந்தை நவ்ஷாத் கானின் உழைப்பும் ஆதரவும்தான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதற்கான மிகப்பெரிய உந்துசக்தி என சர்ஃபராஸ் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து ரன்கள் குவிப்பதே தனது வேலை என்றும், வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் விளையாடத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஓய்வு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

நியூசிலாந்திடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.. 4வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி!
India vs New Zealand T20

நியூசிலாந்திடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.. 4வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com