பிரபலமான முடிவுகளை எடுப்பது என் வேலை அல்ல; சரியான முடிவுகளே என் பணி.. கவுதம் கம்பீர்!

Gautam Gambhir: பிரபலமான முடிவுகளை எடுப்பது என் வேலை அல்ல; சரியான முடிவுகளை எடுப்பதே என் பணி என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Published on: November 1, 2026 at 8:41 pm

ஹாமில்டன், நவ.1, 2026: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அணித் தேர்வு தொடர்பான விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளார். அனைவரையும் மகிழ்விப்பது தனது வேலையல்ல என்றும், அணியின் நலனைக் கருத்தில் கொண்டு சரியான முடிவுகளை எடுப்பதே தனது பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டிக்கு முன்னதாகப் பேசிய அவர், சமூக வலைதளங்களில் எழும் விமர்சனங்கள் மற்றும் வெளிப்புறக் கருத்துகளின் அடிப்படையில் அணித் தேர்வு செய்ய முடியாது என்றார். அணியின் நலனுக்கு எது சரியானதோ அந்த முடிவையே எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், நீண்ட காலமாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும், வீரர்கள் அணிக்குள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் உணர்வதை உறுதி செய்வது முக்கியம் என்றும் தெரிவித்தார்.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஏற்கெனவே 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்திய வீரர்கள் முழு ஈடுபாட்டுடன் விளையாடுவார்கள் என்றும், சர்வதேசப் போட்டிகள் எதுவும் சாதாரணமானவை அல்ல என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மும்பை இந்தியன் பேட்டிங் பயிற்சியாளர் யார் தெரியுமா? எகிறும் எதிர்பார்ப்பு!

நியூசிலாந்திடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.. 4வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி!
India vs New Zealand T20

நியூசிலாந்திடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.. 4வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com