Yogi Babu: யோகிபாபுவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள, சிங்காரம்மா திரைப்படம் நரிக்குறவர் மக்களின் வாழ்வுரிமை, சுயமரியாதையைப் பேசுகிறது.
Yogi Babu: யோகிபாபுவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள, சிங்காரம்மா திரைப்படம் நரிக்குறவர் மக்களின் வாழ்வுரிமை, சுயமரியாதையைப் பேசுகிறது.

Published on: November 1, 2026 at 6:59 pm
சென்னை, நவ.1, 2026: இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘சிங்காரம்மா’. 1990-களின் பின்னணியில், உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், நரிக்குறவர் சமூக மக்களின் வாழ்க்கை, அடையாளம், சமூகப் பாகுபாடு மற்றும் உரிமைப் போராட்டங்களைப் பேசுகிறது.
பொள்ளாச்சியின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் வாழ்க்கையில், எதிர்பாராத லாட்டரிப் பரிசு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்தப் பணத்தைப் பெறுவதற்குக்கூட நிரந்தர முகவரி, வங்கிக் கணக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் சிங்காரம்மா எதிர்கொள்ளும் சிக்கல்கள் கதையின் முக்கிய அம்சமாக அமைகின்றன.
யோகிபாபு வழக்கமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்டு, உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக, படத்தின் இரண்டாம் பாதியில் சமூகப் பாகுபாடு, பெண்களின் துயரம், வாழ்வாதாரப் போராட்டம் மற்றும் சுயமரியாதை குறித்த காட்சிகள் கவனம் பெறுகின்றன.
சாதி மற்றும் சமூகப் பாகுபாடுகளைக் கடந்து அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதையும், நரிக்குறவர் சமூகத்தினர் தானத்தை எதிர்பார்க்காமல் உழைத்து வாழ விரும்புவதையும் படம் வலியுறுத்துகிறது. தொடக்கத்தில் சற்றே மெதுவாக நகரும் திரைக்கதையிலும், சில நகைச்சுவைக் காட்சிகளிலும் குறைகள் இருந்தாலும், சமூக அக்கறை கொண்ட கதைக்களம் மற்றும் யோகிபாபுவின் நடிப்புக்காகப் படம் கவனம் பெறுகிறது. இப்படத்திற்கு 5-க்கு 3 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுகிறது.
இதையும் படிங்க : அனிருத் – காவ்யா திருமண ஏற்பாடுகள்.. தினமும் 3, 4 முறை ஆலோசனை! அழைப்பிதழ் வடிவமைப்பாளர் தகவல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com