Punjab CM Bhagwant Mann Hospitalized | பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மொகாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, இருதயவியல் துறையின் இயக்குநரும் தலைவருமான டாக்டர் ஆர்.கே. ஜஸ்வால் சிகிச்சை அளித்துவருகிறார்.
இதற்கிடையில், “வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் டாக்டர் ஜஸ்வால், “பகவந்த் மானுக்கு லெப்டோஸ்பிரோசிஸ் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் உடல் நிலை முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் அவரை கண்காணித்துவருகின்றனர். பகவந்த் மானுக்கு லெப்டோஸ்பிரோசிஸ் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் பகவந்த் மான் முக்கியமானவர் ஆவார். இவர் திரைப்பட நகைச்சுவை நடிகராக வாழ்க்கையை தொடங்கியவர். பின்னாள்களில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து முதலமைச்சராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :
Tamil News LIVE Updates 11 March 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Arvind Kejriwal may become Rajya Sabha MP: ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் , டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவைக்கு…
Chinese apps are back in India: முன்னர் தடை செய்யப்பட்ட 36 சீன செயலிகள் இந்தியாவில் மீண்டும் வந்துள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தச்…
எல்லைப் பிரிப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் இந்தியா- சீனா இடையே பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது….
இந்தியாவில் முதன்மையான 7 பழமையான பள்ளிகள் தெரியுமா?…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்