Tamil Nadu Auto Fare Revision: தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணம் மாற்றப்பட்டுள்ளது.
Tamil Nadu Auto Fare Revision: தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணம் மாற்றப்பட்டுள்ளது.

Published on: October 28, 2026 at 11:14 am
சென்னை, அக்.28, 2026: தமிழகத்தில் 13 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த ஆட்டோ கட்டணத்தை அரசு திருத்தி அறிவித்துள்ளது. இதன்படி, முதல் 1.8 கிலோமீட்டர் தூரத்திற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும்.
புதிய கட்டண முறை தொடர்பாக, தமிழக அரசின் உள்துறை (போக்குவரத்து) துறை அரசிதழில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனைச் செயல்படுத்த மாநில மற்றும் மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பயணம் செய்வோருக்கு வழக்கமான கட்டணத்தைவிட ஒன்றரை மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், காத்திருப்புக் கட்டணமாக நிமிடத்திற்கு ரூ.1 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் பயணம் செய்வதற்கான கட்டணமும் தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிர்ணயிக்கப்பட்ட பழைய கட்டணத்தின்படி, முதல் 1.8 கிலோமீட்டருக்கு ரூ.25-ம், அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.12-ம் வசூலிக்கப்பட்டது. எரிபொருள் விலை, வாகனப் பராமரிப்புச் செலவு மற்றும் உதிரிபாகங்களின் விலை உயர்வு காரணமாக ஆட்டோ ஓட்டுநர்கள் நீண்டகாலமாகக் கட்டண உயர்வு கோரி வந்த நிலையில், தற்போது இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சென்னையில் அரிசி விலை ஒரே மாதத்தில் 37% வரை உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com