சென்னையில் அரிசி விலை ஒரே மாதத்தில் 37% வரை உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி!

Chennai Rice Price Hike: சென்னையில் அரிசி விலை ஒரே மாதத்தில் 37% வரை உயர்வு கண்டுள்ளது.

Published on: October 27, 2026 at 4:55 pm

Updated on: October 27, 2026 at 4:56 pm

சென்னை, அக்.27, 2026: சென்னையில் அரிசி விலை கடந்த ஒரு மாதத்தில் 10 சதவீதம் முதல் 37 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் பொதுமக்களின் குடும்பச் செலவுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, பொன்னி, இட்லி அரிசி மற்றும் பாசுமதி அரிசி விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.

கிருஷ்ணா பிராண்ட் புழுங்கல் பொன்னி அரிசி கிலோ ரூ.61-லிருந்து ரூ.79 ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிள் பிராண்ட் பச்சரிசி கிலோ ரூ.58-லிருந்து ரூ.71 ஆகவும், ஒரு வகை பாசுமதி அரிசி ரூ.60-லிருந்து ரூ.97 ஆகவும் அதிகரித்துள்ளது.

இட்லி அரிசி கிலோ ரூ.37-லிருந்து ரூ.46 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், புல்லட் பொன்னி அரிசி ரூ.73-லிருந்து ரூ.87 ஆகவும், சிவாஜி பிராண்ட் பொன்னி அரிசி ரூ.73-லிருந்து ரூ.84 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அரிசி வரத்து குறைந்துள்ளதும், பிரபலமான சில பிராண்டுகள் போதிய அளவில் கிடைக்காததும் விலை உயர்வுக்குக் காரணமாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், பண்டிகைக் காலத் தேவை அதிகரித்துள்ளதால் வரும் நாட்களில் அரிசி விலை மேலும் உயரக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க : தீபாவளிக்கு முன் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு.. முழு விவரம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com