நீலகிரி மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து.. டூரிஸ்ட் நோட் பண்ணுங்க!

Nilgiri Mountain Railway Cancelled: நீலகிரி மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது; இதற்கிடையில், கனமழையால் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

Published on: October 27, 2026 at 12:32 pm

நீலகிரி, அக்.27, 2026: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் இடையிலான மலை ரயில் சேவை அக்டோபர் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் ஊட்டிக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர் மழையால் மலை ரயில் பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், பாறைகள் உருண்டு விழுந்ததுடன், மரங்களும் தண்டவாளத்தின் குறுக்கே விழுந்துள்ளன. இதனால் ரயில் போக்குவரத்து பாதுகாப்பற்ற சூழலில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்படும் உதகமண்டலம் பயணிகள் ரயிலும், உதகமண்டலத்திலிருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலும் மேற்கண்ட மூன்று நாட்களிலும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் விழுந்துள்ள மண், பாறைகள் மற்றும் மரங்களை அகற்றி, ரயில் பாதையைச் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பெய்யும் மழை மற்றும் மலைப்பகுதியின் கடினமான நில அமைப்பு காரணமாகச் சீரமைப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பயணிகள் ரயில் சேவை குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகளைத் தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க : கன்னியாகுமரியில் தொடர் மழை.. ரப்பர் பால் வடிக்கும் பணி பாதிப்பு.. தொழிலாளர்கள் நிவாரணம் கோரிக்கை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com