யூசுப் பதானுக்கு நிலம் வழங்க குஜராத் அரசு முடிவு.. சட்ட அடிப்படை என்ன?

Yusuf Pathan Land Allotment: யூசுப் பதானுக்கு நிலம் வழங்க குஜராத் அரசு எடுத்த முடிவு தொடர்பான சட்ட அடிப்படை என்ன?

Published on: October 25, 2026 at 1:10 pm

புதுடெல்லி, அக்.25, 2026: குஜராத் மாநிலம் வதோதராவில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான யூசுப் பதானுக்கு, வதோதரா மாநகராட்சிக்குச் சொந்தமான 978 சதுர மீட்டர் நிலத்தை ஒதுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதில் 500 சதுர மீட்டர் நிலத்தை இலவசமாகவும், மீதமுள்ள 478 சதுர மீட்டர் நிலத்தைச் சலுகை விலையிலும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலத்திற்காக யூசுப் பதான் கடந்த 2012ஆம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். தனது சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற அடையாளத்தால் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் இருப்பதாகக் குறிப்பிட்டு, தனது வீட்டையொட்டிய நிலத்தை 99 ஆண்டுக் குத்தகைக்கு, பொது ஏலம் இன்றி ஒதுக்கக் கோரியிருந்தார். ஆனால், குஜராத் அரசு 2014ஆம் ஆண்டு அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.

இதற்கிடையில், நிலத்தைச் சுற்றி வேலி அமைத்து ஆக்கிரமித்ததாக யூசுப் பதானுக்கு எதிராக மாநகராட்சி 2024ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. நில ஒதுக்கீடு தொடர்பான அவரது வழக்கில், 2025ஆம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்றம் அரசின் முந்தைய முடிவை உறுதி செய்தது. பின்னர் அவர் மேல்முறையீட்டைத் திரும்பப் பெற்றார்.

பொதுச் சொத்துகளை ஒதுக்குவதற்கான குஜராத் அரசின் 2002ஆம் ஆண்டு விதிமுறைகள், நிலத்தை விற்பனை செய்தல், 99 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடுதல் மற்றும் மேம்பாட்டு உரிமைகளை வழங்குதல் ஆகியவற்றை அனுமதிக்கின்றன. ஆனால், தனிநபருக்கு இலவசமாக நிலத்தைப் பரிசளிப்பதற்கான தெளிவான ஏற்பாடு இந்த விதிகளில் இல்லை. குறிப்பிட்ட பொது நலத் திட்டங்களுக்கான சிறப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான 13ஆவது விதியும் தனிநபருக்கு நிலம் வழங்குவதை நேரடியாக உள்ளடக்கவில்லை என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விளக்கியுள்ளது.

இந்த ஒதுக்கீடு வழக்கமான முன்னுதாரணமாகக் கருதப்படாது என மாநில அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு எதிராக, பொதுச் சொத்துகளை ஒதுக்குவதில் சமத்துவம் பின்பற்றப்படுகிறதா என்றும், ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட கோரிக்கைக்கு தற்போது விதிவிலக்கு அளிப்பது ஏன் என்றும் குடிமக்கள் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன. வதோதரா மாநகராட்சியின் நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மாநகராட்சியின் பொதுக்குழுவின் இறுதி ஒப்புதலும் இந்த விவகாரத்தில் முக்கியமானதாக உள்ளது.

இதையும் படிங்க : காஷ்மீர் பிரச்சினை உயிர்ப்புடன் இருக்க பாகிஸ்தானே காரணம்.. ஃபரூக் அப்துல்லா

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேஹா போராவுக்கு பின்னடைவு.. அமைதிப் பிணை நோட்டீஸுக்கு எதிரான மனு தள்ளுபடி
Peace Bond

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேஹா போராவுக்கு பின்னடைவு.. அமைதிப் பிணை நோட்டீஸுக்கு எதிரான

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கரப்பான்பூச்சி கைகோர்ப்பு.. கவனம் பெறும் பா.ஜ.க எதிர்ப்பு புதிய கூட்டணி!
New Young Leaders

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கரப்பான்பூச்சி கைகோர்ப்பு.. கவனம் பெறும் பா.ஜ.க எதிர்ப்பு புதிய கூட்டணி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com