இந்தியாவின் முதல் என்-டைப் குவார்ட்டர் செல் சோலார் மாட்யூல் அறிமுகம்.. முழு விவரம்!

Solex Energy: இந்தியாவின் முதல் என்-டைப் குவார்ட்டர் செல் சோலார் மாட்யூலை சோலெக்ஸ் எனர்ஜி அறிமுகப்படுத்துகிறது.

Published on: October 23, 2026 at 1:51 pm

புதுடெல்லி, அக்.23, 2026: இந்தியாவின் முதல் N-Type குவார்ட்டர் செல் சோலார் மாட்யூலை அறிமுகப்படுத்தும் சோலெக்ஸ் எனர்ஜி!

இந்திய சோலார் மாட்யூல் தயாரிப்பு நிறுவனமான சோலெக்ஸ் எனர்ஜி லிமிடெட், இந்தியாவின் முதல் N-Type TOPCon தொழில்நுட்பத்திலான குவார்ட்டர் செல் சோலார் மாட்யூலான ‘TAPI RQ’-ஐ அறிமுகப்படுத்துகிறது. கிரேட்டர் நொய்டாவில் அக்டோபர் 22 முதல் 24 வரை நடைபெறும் Renewable Energy India Expo 2026 கண்காட்சியில் இந்த மாட்யூல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

‘TAPI RQ’ சோலார் மாட்யூல் அதிகபட்சமாக 670 வாட் மின் உற்பத்தித் திறனையும், 24.80 சதவீதம் வரை செயல்திறனையும் கொண்டுள்ளது. தூசி மற்றும் நீரிலிருந்து பாதுகாக்கும் IP68 தரத்திலான ஜங்ஷன் பாக்ஸ் இதில் இடம்பெற்றுள்ளது. பெரிய அளவிலான சூரிய மின் திட்டங்களில் அதிக மின் உற்பத்தி மற்றும் நீண்டகால நம்பகத்தன்மையை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சோலெக்ஸ் எனர்ஜி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் சேத்தன் ஷா கூறுகையில், சோலார் தொழில்நுட்பத்தில் புதுமைகளைப் புகுத்துவதும், உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதும் நிறுவனத்தின் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் தற்சார்பு இலக்கை ஆதரிக்கும் வகையில் மேம்பட்ட சூரிய மின் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

நிறுவனத்தின் விஷன் 2030 திட்டத்தின்கீழ், சோலார் செல் உற்பத்தி, பேட்டரி மின்சேமிப்பு அமைப்புகள் மற்றும் வேஃபர் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் ரூ.14,300 கோடி முதலீட்டில் ஒருங்கிணைந்த உற்பத்தி கட்டமைப்பை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, குஜராத் அரசுடன் ரூ.4,000 கோடி முதலீட்டில் 5 ஜிகாவாட் சோலார் செல் உற்பத்தி ஆலை மற்றும் 10 ஜிகாவாட் மணி நேர பேட்டரி மின்சேமிப்பு உற்பத்தி வசதியை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ.. 100 நிமிடங்களில் முழுமையாகச் சந்தா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com