Government Holidays: 2027-ல் தமிழகத்தில் 24 அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 7 தொடர் விடுமுறை வாய்ப்புகள் உள்ளன.
Government Holidays: 2027-ல் தமிழகத்தில் 24 அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 7 தொடர் விடுமுறை வாய்ப்புகள் உள்ளன.

Published on: October 23, 2026 at 11:39 am
சென்னை, அக்.23, 2026: தமிழகத்தில் 2027-ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், ரம்ஜான், தமிழ்ப் புத்தாண்டு, பக்ரீத், ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
2027 ஜனவரி 1-ம் தேதி வெள்ளிக்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறையுடன் தொடங்குகிறது. ஜனவரி 15-ம் தேதி பொங்கல், ஜனவரி 22-ம் தேதி தைப்பூசம், மார்ச் 26-ம் தேதி புனித வெள்ளி ஆகியவை வெள்ளிக்கிழமைகளில் வருவதால், சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளுடன் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும், ஏப்ரல் 19-ம் தேதி மகாவீர் ஜெயந்தி மற்றும் மே 17-ம் தேதி பக்ரீத் ஆகியவை திங்கட்கிழமைகளில் வருகின்றன. அக்டோபர் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை ஆயுத பூஜையும், அக்டோபர் 9-ம் தேதி சனிக்கிழமை விஜயதசமியும் வருவதால், இந்த நாட்களிலும் தொடர் விடுமுறையைப் பெற முடியும்.
அதேபோல், அக்டோபர் 28-ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. அக்டோபர் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்துக்கொண்டால், சனி, ஞாயிறு விடுமுறைகளுடன் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையைப் பெறலாம். இதன் மூலம் பொதுமக்கள் தங்களது சுற்றுலா மற்றும் குடும்பப் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட முடியும்.
இதையும் படிங்க : நாடு முழுக்க வாக்காளர்கள் 51 சதவீத பெண்கள்.. அண்ணாமலை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com