Kerala Tourist Harassment Case: கேரளத்தில், பிரிட்டன் பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Kerala Tourist Harassment Case: கேரளத்தில், பிரிட்டன் பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published on: October 20, 2026 at 1:24 pm
திருவனந்தபுரம், அக்.20, 2026: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வற்கலாவில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர், வற்கலாவின் ஓடயம் பகுதியைச் சேர்ந்த ஷஹாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு சாப்பிடுவதற்காக வெளியே சென்ற அந்தப் பெண், திங்கள்கிழமை அதிகாலை சுமார் 1.30 மணியளவில் தனது அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை அணுகிய நபர், பாலியல் தொல்லை அளித்ததுடன், அவரது ஆடையையும் கிழித்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் குழுவினரிடம் தஞ்சமடைந்தார். அவர்கள் தலையிட்டு அந்த நபரைத் தடுத்து நிறுத்தினர். பின்னர், திங்கள்கிழமை காலை காவல்துறையிடம் அந்தப் பெண் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அந்தப் பெண் பதிவு செய்த காணொளியின் உதவியுடன் குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் கண்டு கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : ராணுவத்தில் திருமணத்தை மீறிய உறவு குற்றமா? உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com