Tamil Nadu Crime and Drug Menace: தமிழ்நாட்டில் குற்றங்கள், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Tamil Nadu Crime and Drug Menace: தமிழ்நாட்டில் குற்றங்கள், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Published on: October 20, 2026 at 12:05 pm
சென்னை, அக்.20, 2026: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் ஜோசப் விஜய் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அரசின் அலட்சியம் உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மனைவி கண்முன்னே ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும், சிவகங்கையில் கொலை வழக்கில் ஜாமீனில் இருந்த மதன் என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பெருந்துறை அருகே செவிலியர் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் செயற்கைப் போதைப்பொருட்கள் தயாரிக்கும் மையமாக மாறிவருவதாகக் குற்றம்சாட்டிய ஸ்டாலின், வேதாரண்யத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் தவெக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டதையும், ‘மெத்’ பூபாலன் என அழைக்கப்படும் தவெக நிர்வாகி மெத்தாம்பெட்டமைன் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டதையும் குறிப்பிட்டார். ஆளுங்கட்சியினருக்கு அரசியல் பாதுகாப்பு இருப்பதாகக் கருதி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
போதைப்பொருள் ஒழிப்பில் திறம்படச் செயல்பட முதலமைச்சர் தனது கட்சியினரைக் கட்டுப்படுத்துவதுடன், காவல்துறையையும் முறையாகச் செயல்படச் செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இளைஞர்களிடம் “விளையாட்டைத் தேர்ந்தெடுங்கள்; போதைப்பொருளை விடுங்கள்” எனக் கூறிய முதலமைச்சர், தற்போது சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதிகளுக்கு பரோல்: தமிழக அரசுக்கு பாஜக கண்டனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com