Onion Sales Incentive: வெங்காயம் விற்பனை செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கிலோவுக்கு ரூ.2 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
Onion Sales Incentive: வெங்காயம் விற்பனை செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கிலோவுக்கு ரூ.2 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: October 19, 2026 at 12:46 pm
சென்னை, அக்.19, 2026: தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெங்காயம் விற்பனை செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.2 ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் (NAFED), தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் (NCCF) ஆகியவற்றிடமிருந்து மூன்று கட்டங்களாக வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவு ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தைப் பெறுதல், இருப்பு வைத்தல், தரம் பிரித்தல், எடையிட்டு விற்பனை செய்தல் மற்றும் கணக்குகளைப் பராமரித்தல் போன்ற கூடுதல் பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் லதா பிறப்பித்த உத்தரவின்படி, விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தின் அளவின் அடிப்படையில் ஊக்கத்தொகை கணக்கிடப்படும். சேதமடைந்த வெங்காயம் மற்றும் விற்பனையாகாமல் இருப்பில் உள்ள வெங்காயத்திற்கு ஊக்கத்தொகை வழங்கப்படாது. உரிய பதிவுகள் ஆய்வு செய்யப்பட்ட பிறகு, ஊக்கத்தொகை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஆயுத பூஜை எதிரொலி: தமிழகத்தில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com