விஜய் தேவரகொணடா- ராஷ்மிகா படம்.. ‘ரணபாலி’ பாக்ஸ் ஆபிஸில் எப்படி?

Ranabaali Box Office Collection: ‘ரணபாலி’ வசூல் ரூ.16 கோடியைக் கடந்துள்ளது; எனினும், 2-வது நாளில் பெரிய வளர்ச்சி இல்லை எனக் கூறப்படுகிறது.

Published on: October 18, 2026 at 1:52 pm

சென்னை, அக்.18, 2026: விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான தெலுங்கு வரலாற்று ஆக்‌ஷன் திரைப்படமான ‘ரணபாலி’, அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ராகுல் சங்கிரித்யன் இயக்கியுள்ள இப்படம், இருவரும் திருமணத்துக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள முதல் திரைப்படமாகவும் கவனம் பெற்றுள்ளது.

இரண்டாவது நாளான சனிக்கிழமை, இப்படம் இந்தியாவில் ரூ.7.17 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிலிக் தரவுகளை மேற்கோள் காட்டி திராவிடன் டைம்ஸ் தெரிவித்துள்ளது. முதல் நாளில் ரூ.9.25 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாள் வசூல் குறைந்துள்ளது. இதன் மூலம் இரண்டு நாட்களில் இந்தியாவில் ரூ.16.42 கோடி வசூல் பதிவாகியுள்ளது.

1800-களின் மதராஸ் மாகாணப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது ஏற்பட்ட பஞ்சத்தையும், அதற்கு எதிராகப் போராடும் நாயகனின் கதையையும் மையமாகக் கொண்டுள்ளது. விஜய் தேவரகொண்டா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ராஷ்மிகா மந்தனா, அர்னால்ட் வோஸ்லூ, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. சில ரசிகர்கள் அதிகப்படியான வன்முறை மற்றும் கதாபாத்திரங்களின் வளர்ச்சி போதுமானதாக இல்லை எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, விஜய் தேவரகொண்டாவின் நடிப்பையும் ஆக்‌ஷன் காட்சிகளையும் பாராட்டியுள்ளார்.

முதல் வார இறுதியில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளில் வசூல் குறைந்திருப்பது படக்குழுவுக்கு கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை வசூல் மற்றும் அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்களின் வரவேற்பு ஆகியவை படத்தின் மொத்த வசூல் நிலவரத்தைத் தீர்மானிக்கும்.

இதையும் படிங்க : இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு.. நடிகர் இம்ரான் கான் நீதிமன்றத்தில் மனு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com