Ayudha Puja Special Train: ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில் சென்னை – காரைக்குடி இடையே இயக்கப்படுகிறது.
Ayudha Puja Special Train: ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில் சென்னை – காரைக்குடி இடையே இயக்கப்படுகிறது.

Published on: October 18, 2026 at 1:44 pm
சென்னை, அக்.18, 2026: ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடிக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இந்த ரயில் (06037) அக்டோபர் 18ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்குப் புறப்பட்டு, அதே நாள் காலை 11.45 மணிக்கு காரைக்குடியைச் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், காரைக்குடியில் இருந்து அக்டோபர் 20ஆம் தேதி இரவு 10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06038), அக்டோபர் 21ஆம் தேதி காலை 8 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மொத்தம் 17 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்தச் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு அக்டோபர் 17ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் இந்தச் சிறப்பு ரயில் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : நவராத்திரி விரதத்தை ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி? நிபுணர்கள் கூறும் வழிமுறைகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com