லதா ரெட்டி ஆக நடிக்கும் கீர்த்தி சுரேஷ். ஊட்டியில் படப்பிடிப்பு!

Keerthy Suresh: ‘ஜனவரி 12 விடுதலை’ படத்தில் லதா ரெட்டியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: October 17, 2026 at 9:39 pm

சென்னை, அக்.17, 2026: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய தெலுங்குத் திரைப்படமான ‘ஜனவரி 12 விடுதலை’ படத்தில், அவர் லதா ரெட்டி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி, படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி சமூக வலைதளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெங்கடேஷ் மற்றும் நந்தமுரி கல்யாண் ராம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். கிரித்தி ஷெட்டி, கல்யாண் ராமுக்கு ஜோடியாக நடிக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது.

அனில் ரவிபுடி இயக்கும் இப்படத்தை சாஹு கரபதி, ஷைன் ஸ்கிரீன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அனிருத்- காவ்யா மாறன் திருமணம்.. தெலங்கானா முதல்வருக்கு நேரில் அழைப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com