Anirudh–Kavya Maran Wedding: அனிருத் – காவ்யா மாறன் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், நவம்பர் 21-ல் சென்னையில் வரவேற்பு நடக்கிறது.
Anirudh–Kavya Maran Wedding: அனிருத் – காவ்யா மாறன் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், நவம்பர் 21-ல் சென்னையில் வரவேற்பு நடக்கிறது.

Published on: October 17, 2026 at 8:48 pm
Updated on: October 17, 2026 at 8:49 pm
ஹைதராபாத், அக்.17, 2026: இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனும் திருமணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகத் தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறன் ஆகியோர் தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டியை ஹைதராபாத்தில் சந்தித்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினர். இதன் மூலம் அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், திருமண நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த விவரங்களை அனிருத், காவ்யா மாறன் தரப்பில் தனியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இதையும் படிங்க : 2 நாள்களில் ரூ.200 கோடி வசூல்.. ஜெயிலர் காட்டில் பண மழை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com