Stalin vs TVK: ‘பிரேக்கிங் பேட் பார்ட்டி’ என தவெகவை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Stalin vs TVK: ‘பிரேக்கிங் பேட் பார்ட்டி’ என தவெகவை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Published on: October 17, 2026 at 7:11 pm
Updated on: October 17, 2026 at 8:33 pm
சென்னை, அக்.17, 2026: நாகப்பட்டினத்தில் ரூ.270 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்குக் கடத்த முயன்றதாகக் கூறப்படும் இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்ட தவெக நிர்வாகியும், கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜயை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தவெக வெறும் ‘பேட் பார்ட்டி’ மட்டுமல்ல; ‘பிரேக்கிங் பேட் பார்ட்டி’” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பேசும் கட்சியிலேயே இத்தகைய சம்பவம் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தக் கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் உள்ள ஒட்டுமொத்த வலையமைப்பையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், முதல்வர் விஜய் இதற்கும் சினிமா பாணி பஞ்ச் வசனங்களைப் பேசாமல் இருக்க வேண்டும் என விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க : எஸ்ஐஆர் நடவடிக்கையில் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியப் பங்கு.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com