ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை! புழல் சிறையில் தீவிர விசாரணை

Police Probe : ஜெம் வீரமணி மீது இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய புகாரின் அடிப்படையில் அவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து புழல் சிறையில் வைத்து சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published on: October 16, 2026 at 1:11 pm

Updated on: October 16, 2026 at 1:14 pm

சென்னை, அக். 16, 2026: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணி மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் தொடர்பாகச் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை வீரமணி மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், வீரமணியிடம் கூடுதல் விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த வழக்கில் வீரமணியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிறப்பு புலனாய்வுக் குழு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி எஸ். பத்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டுவிட்டதாகவும், எனவே போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் வீரமணி தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ். பத்மா, வீரமணியை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கச் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுமதி வழங்கினார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி புழல் மத்திய சிறையில் வைத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சிறை வளாகத்திலேயே விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையை முடித்து வீரமணியை சனிக்கிழமை (அக்டோபர் 17) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்பு, அவர் மீது முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கிலும் 3 நாட்கள் போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். தற்போது புதிய புகாரின் அடிப்படையில் கூடுதல் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் கவனத்தைப் பெற்றுள்ளன.

இதையும் படிங்க: நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக் கொலை? 11 பேர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com