சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் பதவியேற்பு! யார் இந்த இருவர்?

HC Judges: சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி. லிங்கேஸ்வரன், பி. கார்த்திகேயன் ஆகிய இருவர் கூடுதல் நீதிபதிகளாகப் பதவியேற்றனர். இதையடுத்து உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட மொத்தப் பணியிடங்கள் 75 என்பது குறிப்பிடத்தக்கது.

Published on: October 16, 2026 at 12:56 pm

Updated on: October 16, 2026 at 1:43 pm

சென்னை, அக். 16, 2026 : சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதலாக இரண்டு நீதிபதிகள் வியாழக்கிழமை (அக்டோபர் 15) பதவியேற்றனர். நீதிபதிகள் டி. லிங்கேஸ்வரன் மற்றும் பி. கார்த்திகேயன் ஆகியோருக்குச் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருவரும் கூடுதல் நீதிபதிகளாகப் பொறுப்பேற்றனர்.

இந்த இருவரின் நியமனத்தைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 65-லிருந்து 67 ஆக உயர்ந்துள்ளது. உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் மொத்தப் பணியிடங்கள் 75 ஆகும். இதன்படி, தற்போது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட 8 நீதிபதிகள் குறைவாக உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1974 மே 10-ஆம் தேதி பிறந்த நீதிபதி டி. லிங்கேஸ்வரன், தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றதுடன், சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டமும் பெற்றார். 2000 ஆகஸ்ட் 9-ஆம் தேதி வழக்கறிஞராகப் பதிவு செய்த அவர், சட்டத் துறையில் பணியாற்றிய பின்னர் 2013-ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

1973 டிசம்பர் 9-ஆம் தேதி பிறந்த நீதிபதி பி. கார்த்திகேயன், 1996-ஆம் ஆண்டு சட்டப் பட்டம் பெற்றார். சிவில் வழக்குகளில் பெரும்பாலும் பணியாற்றிய இவர், 2005-ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் சென்னையில் முதன்மை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றினார். புதிய நீதிபதிகளைத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் மற்றும் பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதையும் படிங்க: மாலத்தீவில் 25 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு.. மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com