Joshna Chinappa: ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது; விளையாட்டுத் துறை இயக்குநரானாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Joshna Chinappa: ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது; விளையாட்டுத் துறை இயக்குநரானாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Published on: October 11, 2026 at 6:26 pm
சென்னை, அக்.11, 2026: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த சர்வதேச ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் (TNPDCL) விளையாட்டுத் துறை இயக்குநராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு அக்டோபர் 9ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதற்கு முன்பு அவர் விளையாட்டுத் துறை துணை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். விளையாட்டில் அவர் தொடர்ந்து படைத்து வரும் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அறிவுறுத்தலின்படி இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அக்டோபர் 10ஆம் தேதி ஜோஷ்னா சின்னப்பாவிடம் நேரில் வழங்கினார்.
ஜோஷ்னா சின்னப்பா, 2014ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கமும், அதே ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர். 2026ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், கலப்பு இரட்டையர் பிரிவில் வேலவன் செந்தில்குமாருடன் இணைந்து ஒரு வெண்கலப் பதக்கத்தையும், இந்திய மகளிர் அணியின் சார்பில் மற்றொரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
இதையடுத்து, அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் அவருக்கு முதலமைச்சர் விஜய் ரூ.60 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிக் கௌரவித்தார். விளையாட்டுத் துறையில் அவரது சாதனைகளுக்குக் கிடைத்துள்ள இந்தப் பதவி உயர்வு, தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க : ரஞ்சி அணியில் ரவீந்திர ஜடேஜா.. நீயும் நானும் வேற இல்லடா.. ரெண்டு பேரும் ஒத்த உசுருடா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com