தமிழக வெற்றிக்கழக நிர்வாகி சென்னையில் படுகொலை.. பகிர் சிசிடிவி காட்சிகள்.. யார் இந்த கண்ணன்?

TVK Functionary Murdered : ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்த அவர், அதிமுகவில் 174-வது தெற்கு வட்டக் கழகச் செயலாளராக இருந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

Published on: September 6, 2026 at 10:30 pm

சென்னை செப். 6, 2026; சென்னை பெசன்ட் நகர் வண்ணாந்துறை பகுதியில் தவெக நிர்வாகி கண்ணன் (வயது 46) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்த அவர், அதிமுகவில் 174-வது தெற்கு வட்டக் கழகச் செயலாளராக இருந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

செப்டம்பர் 5 இரவு, உணவருந்திவிட்டு தனது கட்சி அலுவலகத்திற்கு வந்த கண்ணனை, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வந்த 6-க்கும் மேற்பட்ட நபர்கள் பட்டா கத்தியால் தாக்கினர். அலுவலக வாசல் முன்பே தலையில் சரமாரியாக வெட்டப்பட்ட கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் தப்பிச் சென்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் காவல்துறையினர், கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் ரோகிணி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை விசாரணையில், கண்ணன் 10 வருடங்களுக்கு முன்பு பி பிரிவு ரவுடியாக இருந்ததும், 2 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கிலும் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே, முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், கண்ணனை கும்பல் கத்தியை கொண்டு துரத்திச் சென்று கீழே தள்ளி வெட்டிக் கொலை செய்யும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. இந்தக் கொலை, சென்னை அரசியல் மற்றும் குற்றவியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க; வெளிப்படையான அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.. அமைச்சர் கீர்த்தனா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com