Vanni Arasu : சனாதன எதிர்ப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவனம் செலுத்தி வருகிறது என சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார் அமைச்சர் வன்னி அரசு.
Vanni Arasu : சனாதன எதிர்ப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவனம் செலுத்தி வருகிறது என சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார் அமைச்சர் வன்னி அரசு.

Published on: September 6, 2026 at 8:19 pm
Updated on: September 6, 2026 at 9:01 pm
சென்னை செப். 6, 2026;சனாதன எதிர்ப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவனம் செலுத்தி வருகிறது என சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார் அமைச்சர் வன்னி அரசு. புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்த அவர், பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்; அப்போது பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பில் தமிழக வெற்றிக்கழக அரசு உறுதியாக உள்ளது என நம்புகிறேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் பாஜகவை எதிர்ப்பதால் தான் எஃப்.சி.ஆர்.ஏ சட்டத்துக்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்; பாஜகவுடன் இணக்கமாக செல்வது என்றால் இது போன்ற தீர்மானங்கள் கொண்டுவர அவசியம் என்ன?
தமிழக வெற்றிக்கழக அரசுக்கு பாஜகவை பார்த்து பயம் இல்லை; பாஜகவின் முதன்மை சட்டங்களுக்கு எதிராக தமிழக வெற்றிக்கழக அரசு போராடி வருகிறது. பாஜக எதிர்ப்பில் தமிழக வெற்றிக்கழக அரசு உறுதியாக உள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்து..
முன்னதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்து பேசிய வன்னி அரசு, சனாதன எதிர்ப்பு அரசியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவனம் செலுத்துகிறது என கூறினார்; மேலும் 2029 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த வன்னி அரசு, ” இந்த விவகாரத்தில் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல் திருமாவளவன் பதில் அளிப்பார் என தெரிவித்தார். அமைச்சர் வன்னி அரசின் இந்த பேட்டி, சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிங்க; பிரதமர் வேட்பாளரா விஜய்? செங்கோட்டையன் அதிரடி பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com