Tamil Nadu Assembly debate; உறுப்பினர்களின் கேள்விக்கு திங்கள்கிழமை பதில் சொல்கிறேன்; யாரும் ஓடாதீர்கள் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Assembly debate; உறுப்பினர்களின் கேள்விக்கு திங்கள்கிழமை பதில் சொல்கிறேன்; யாரும் ஓடாதீர்கள் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

Published on: September 3, 2026 at 7:04 pm
சென்னை செப். 3, 2026; தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “இஸ்லாமிய கைதிகள் தொடர்பாக திமுக மனு தாக்கல் செய்தது, சிறைக் கைதிகளை விடுவிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியது” எனக் கூறினார். மேலும், நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், மெரினா மற்றும் பெசன்ட் நகர் போன்ற இடங்களில் கடந்த ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், போக்சோ வழக்குகள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து, “போதைப்பொருள் பிரச்சனை கடந்த ஆட்சியில்தான் உருவானது. 100 நாட்களில் அனைத்தையும் சரி செய்ய முடியாது. ஆனால் அதற்கான கட்டமைப்பை உருவாக்க முடியும். டிஜிபி நியமிக்கப்படவில்லை என்று கூறினார்கள், ஆனால் நாங்கள்தான் நியமித்தோம்” என்று விளக்கம் அளித்தார்.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, “யார் பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டுமோ அவர்கள் பதில் சொல்ல மறுக்கிறார்கள். முதல்வர் தயாராக இருப்பதாகக் கூறுகிறீர்கள், இப்போதே முதல்வர் பேசலாம்” என்று வலியுறுத்தினார். மேலும், போக்சோ குற்றங்கள் அதிகரித்தது விழிப்புணர்வு காரணமாக புகார்கள் அதிகரித்ததால்தான் என்றும், போதைப்பொருள் ஒழிப்பில் தவறுகள் இருந்தால் அந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஏன் வழங்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர், “திங்கட்கிழமை பதிலுரை உள்ளது. யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம்” என்று தெரிவித்தார். இதனால், விவாதம் மேலும் தீவிரமடைந்தது.
இறுதியாக, முதலமைச்சர் விஜய், “உறுப்பினர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் கூறுகிறேன். நான் அவையில் இல்லாமல் இருந்தாலும் யார் என்ன கேள்வி கேட்டார்கள் என்பது எனக்கு வரும். அதற்குரிய பதிலைத் தருகிறேன். ஆனால் அன்றைக்கு யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது” என்று மறைமுகமாக திமுகவினரை விமர்சித்தார்.
இதையும் படிங்க; “இந்தியா கூட்டணியின் ஒரே பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி” .. வைகோ அதிரடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com