CM vijay: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்ற “வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026”-இல், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.67,452 கோடி மதிப்பில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
CM vijay: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்ற “வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026”-இல், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.67,452 கோடி மதிப்பில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: August 13, 2026 at 4:45 pm
சென்னை, ஆக.13, 2026: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்ற “வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026”-இல், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.67,452 கோடி மதிப்பில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என அரசு தெரிவித்துள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாள்களுக்குள் ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன; இதன்மூலம் 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டில், கஜகஸ்தான், நியூசிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளின் நிறுவனங்களுடன் இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர் திறன் மேம்பாடு, தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் 7 நிறுவன ரீதியான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முடிவுற்ற திட்டங்களின் திறப்பு நிகழ்வில், திருச்சி மொண்டிப்பட்டியில் ரூ.350 கோடி செலவில் டிஷ்யூ காகித உற்பத்தி ஆலையும், காஞ்சிபுரம் வல்லம் வடகலில் ரூ.250 கோடி செலவில் ஏரோஹப் வளாகமும், சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.122.08 கோடி மதிப்பில் 11 புதிய கட்டடங்களும், தனியார் நிறுவனத்தின் ரூ.55.66 கோடி மதிப்பில் 2 கட்டடங்களும் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். மொத்தம் ரூ.777.74 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், 4,476 கோடி முதலீட்டில் 8 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 5,074 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது. 2,676 கோடி முதலீட்டில் 5 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, 1,550 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. 9 நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்ட 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
தூத்துக்குடியில், ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் 250 கோடி முதலீட்டில் ஏவுகலன் உற்பத்தி மற்றும் சோதனை வசதிகளை அமைக்கவுள்ளது; 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேபோல், அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் 400 கோடி முதலீட்டில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய திரவ உந்துவிசை ஏவுகலன் உற்பத்தி வசதிகளை அமைக்கவுள்ளது; 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கிருஷ்ணகிரியில், அல்ட்ராவயலட் நிறுவனம் 779 கோடி முதலீட்டில் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளது; 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சென்னையில், சூப்பர் மைக்ரோ நிறுவனம் 477 கோடி முதலீட்டில் சர்வர் உற்பத்தி மையத்தை அமைக்கவுள்ளது; 150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். திருவள்ளூரில், YKK ஜப்பான் நிறுவனம் 1,651 கோடி முதலீட்டில் ஜிப்பர் உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளது; 4,316 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
காஞ்சிபுரத்தில், பிட்சர் ஜெர்மனி நிறுவனம் 300 கோடி முதலீட்டில் HVAC கம்ப்ரசர் ஆலையை அமைக்கிறது. JK டயர் நிறுவனம் 5,143 கோடி முதலீட்டில் தனது திட்டத்தை விரிவாக்குகிறது; 3,510 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். டைம்லர் ஜெர்மனி நிறுவனம் 4,000 கோடி முதலீட்டில் ஒரகடம் தொழிற்பூங்காவில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையத்தை மேம்படுத்துகிறது; 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதன் மூலம், தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த மாநாடு, மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும், உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க : சென்னையில் ஆக.14 மின்தடை.. திருவொற்றியூர் மக்களே நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com