Rahul Gandhi: பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் நலன்களை விற்றுவிட்டார் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Rahul Gandhi: பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் நலன்களை விற்றுவிட்டார் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published on: August 12, 2026 at 12:48 pm
புதுடெல்லி, ஆக.12, 2026: அமெரிக்க நீதிமன்றம் தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது இருந்த குற்றவியல் புகார்களை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அதில், “சமரசம் செய்துகொண்ட பிரதமர் இந்தியாவின் நலன்களை விற்றுவிட்டார்” என்று அவர் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். வெளிப்படையாகத் தெரிவதை விட இதில் பல விஷயங்கள் உள்ளன என்றும், இந்தியா இதற்காக பெரும் விலையைக் கொடுத்து வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றம் பங்குகள் மற்றும் இதர மோசடிகள் தொடர்பான குற்றவியல் புகார்களை நிரந்தரமாக தள்ளுபடி செய்தது. அதோடு, அதானி தரப்பினருக்கும் அமெரிக்க பங்குச் சந்தைக்கும் இடையிலான சமரச ஒப்பந்தத்தையும் உறுதிப்படுத்தியது. குற்றத்தை ஒப்புக்கொள்ளாமலேயே அதானி தரப்பினர் 18 மில்லியன் டாலர் தொகையைச் செலுத்தி, சிவில் புகார்களை முடித்துக்கொள்ள ஒப்புக்கொண்டனர். இதன் மூலம் நீண்டகாலமாக நீடித்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த தீர்ப்பை வரவேற்ற அதானி, “நீதித்துறை செயல்முறையின் மீதான ஆழ்ந்த மரியாதையுடனும் பணிவுடனும் அமெரிக்க நீதிமன்றத்தின் முடிவை நான் வரவேற்கிறேன். உண்மை, நேர்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான எங்கள் நம்பிக்கை அசைக்க முடியாததாக இருந்தது” என்று ‘எக்ஸ்’-இல் குறிப்பிட்டார். மேலும், “நாட்டைக் கட்டமைக்கும் பணிகளில் அதானி குழுமம் தொடர்ந்து ஈடுபடும்” என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க நீதித்துறை 2024-இல் அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்திய அரசு நிறுவனங்களிடமிருந்து சூரிய ஆற்றல் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக 265 மில்லியன் டாலர் மதிப்பிலான லஞ்ச நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பொய் கூறி, முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இவை அனைத்தும் இப்போது நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : ராகுல் காந்தி அவையில் நேரடியாக பங்கேற்க வேண்டும்.. கிரண் ரிஜிஜு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com