கொரியா மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டியில் அஸ்மிதா சாலிஹா! இந்திய வீராங்கனை அசத்தல்

Ashmita in Final: தென் கொரியாவில் நடைபெறும் கொரியா மாஸ்டர்ஸ் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை அஸ்மிதா சாலிஹா முன்னேறியுள்ளார்.

Published on: August 8, 2026 at 4:47 pm

ஆசான், ஆக 8, 2026: தென் கொரியாவின் ஆசானில் நடைபெறும் கொரியா மாஸ்டர்ஸ் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை அஸ்மிதா சாலிஹா முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற அரையிறுதியில் சகநாட்டு வீராங்கனை ரக்ஷிதா ராம்ராஜை 21-13, 16-21, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார்.

முதல் நிலை வீராங்கனைக்கு அதிர்ச்சி

இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு முன்பு, காலிறுதியில் அஸ்மிதா மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தொடரின் முதல் நிலை வீராங்கனையும், உலகத் தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஹினா அகேச்சியையும் 3 செட் கொண்ட பரபரப்பான ஆட்டத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இறுதிப்போட்டி

இறுதிப்போட்டியில் அஸ்மிதா சாலிஹா, சீனாவின் கியூ ஹான்உடன் மோத உள்ளார். மற்றொரு அரையிறுதியில் தென் கொரியாவின் ஜி கிம்மை22-20, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஹான் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

தொடர்ச்சியாக முக்கியமான வெற்றிகளைப் பதிவு செய்து வரும் அஸ்மிதா சாலிஹா, தற்போது கொரியா மாஸ்டர்ஸ் சூப்பர் 300 தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். நாளைய இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை கியூ ஹானை வீழ்த்தி பட்டம் வெல்லும் முனைப்புடன் அஸ்மிதா களமிறங்க உள்ளார்.

இதையும் படிங்க : செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.. ஜிசிடி தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேற்றம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com