ஒரு தந்தையின் இதயத்துக்கு இதைவிட என்ன வேண்டும்? நெகிழ்ந்த மோகன்லால்!

Mohanlal Gets Emotional : சென்னை, ஆக 8, 2026: மலையாள நடிகர் மோகன்லால், தனது மகள் விஸ்மயா மோகன்லால் ‘துடக்கம் (Thudakkam)’ திரைப்படம் மூலம் சினிமாவில் பயணத்தைத் தொடங்கியதை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்.

Published on: August 8, 2026 at 3:58 pm

திருவனந்தபுரம், ஆக. 8 2026: மலையாள நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால், ‘துடக்கம்’ திரைப்படம் மூலம் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த மோகன்லால், மகளின் புதிய பயணத்தையும் அவருக்கு கிடைக்கும் அன்பையும் பார்ப்பது ஒரு தந்தையாக தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

விஸ்மயா குத்துச்சண்டை பயிற்சி மேற்கொள்வது போன்ற போஸ்டரைப் பகிர்ந்த மோகன்லால், தனது மகளின் புதிய பயணத்தைப் பார்ப்பதும், அவருக்கு ரசிகர்கள் அளித்துவரும் அன்பையும் காண்பதும் மிகுந்த மகிழ்ச்சியையும் ஆசீர்வாதத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

விஸ்மயாவுக்கும் அவருடன் நடித்துள்ள ஆஷிஷ் ஜோ ஆண்டனிக்கும் ரசிகர்கள் அளித்து வரும் அன்பையும் ஆதரவையும் மோகன்லால் பாராட்டியுள்ளார். சிறுவயது முதலே தமக்கு நன்கு தெரிந்த ஆஷிஷ் ஜோ ஆண்டனி, தனது மகளுடன் இந்த அழகான பயணத்தை இணைந்து மேற்கொள்வது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருவரையும் அன்புடன் வரவேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜூட் அந்தனி ஜோசப் இயக்கியுள்ள ‘துடக்கம்’ ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாகும். இதற்கான திரைக்கதையை ஜூட் அந்தனி ஜோசப், அகில் கிருஷ்ணா மற்றும் லினிஷ் நெல்லிக்கல் ஆகியோருடன் இணைந்து எழுதியுள்ளார். இப்படத்தில் விஸ்மயா மோகன்லால், மோகன்லால், ஆஷிஷ் ஜோ ஆண்டனி, பாபி குரியன், சாய் குமார், கே.பி. கணேஷ் குமார், மனோஜ் கே. ஜெயன், மியா ஜார்ஜ் மற்றும் ஜாஃபர் இடுக்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஸ்மயாவின் முதல் படமான ‘துடக்கம்’ உருவாக்கப்பட்ட விதத்தில் மிகவும் மகிழ்ச்சியடைந்த மோகன்லாலின் மனைவி சுசித்ரா மோகன்லால், ஆகஸ்ட் 6-ம் தேதி இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப்புக்கு விலையுயர்ந்த சுவிஸ் கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து ஜூட் அந்தனி ஜோசப் தனது சமூக வலைதளப் பதிவில், சுசித்ராவை தனது மூத்த சகோதரியாகவும், விஸ்மயாவை இளைய சகோதரியாகவும் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். ‘துடக்கம்’ படத்தைப் பார்த்த பிறகு சுசித்ரா வழங்கிய பரிசை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஓ மை டாக்.. நாய்கடியில் இருந்து தப்பிய பிரபல நடிகை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com