“கைத்தறி பொருட்களை வாங்கி ஆதரியுங்கள்” – பிரதமர் மோடி வேண்டுகோள்

Handloom Day: தேசிய கைத்தறி தினத்தையொட்டி, தங்கள் கைகளால் துணிகளை உருவாக்கும் ஏழை நெசவாளர் குடும்பங்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Published on: August 7, 2026 at 11:51 am

புதுடெல்லி, ஆக. 7 2026: தேசிய கைத்தறி தினத்தையொட்டி, ஒவ்வொரு குடிமகனும் இந்த நாளை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ந்தேதி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டதாகவும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நெசவாளர்களுக்கு ஆதரவு

தங்கள் கைகளால் துணிகளை உருவாக்கும் ஏழை நெசவாளர் குடும்பங்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். சிறு அளவில் தொழில் செய்து வரும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நெசவாளர் குடும்பங்களை வலுப்படுத்துவது, தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு கைத்தறி பொருள் வாங்குங்கள்

ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு கைத்தறி பொருளையாவது வாங்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்தப் பொருளை வாங்கியதை வீடியோவாக பதிவு செய்து, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பகிருமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் இந்திய நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் திறமை, கலைநயம் மற்றும் பாரம்பரிய கைவினைப் பணிகளுக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ந்தேதி தேசிய கைத்தறி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் இந்தியாவின் வளமான கைத்தறி பாரம்பரியத்தை நாடு கொண்டாடுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். தலைமுறை தலைமுறையாக இந்தியாவின் பாரம்பரியங்களை பாதுகாத்து, வளப்படுத்தி வரும் நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் திறமை, படைப்பாற்றல், அர்ப்பணிப்புக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

கிராமப்புற மேம்பாடு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் தற்சார்பு இந்தியா என்ற இலக்கை எட்டுவதில் கைத்தறித் துறை முக்கிய தூணாக இருப்பதால், அந்தத் துறைக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், மக்கள் தங்களுக்கு பிடித்த கைத்தறி பொருட்களை பகிர்ந்து, #NationalHandloomDay என்ற ஹேஷ்டேக்குடன் வீடியோக்களை வெளியிட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : பா.ஜ.க கோட்டையில் பிரசாந் கிஷோர் வெற்றிக் கொடி நாட்டியது எப்படி? பின்னணி இப்படியா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com