திடீர் பலத்த காற்று… கவிழ்ந்த படகு.. தத்தளித்த 7 மீனவர்கள்… நடுக்கடலில் நடந்தது என்ன?

Tuticorin Boat Mishap : தூத்துக்குடி அருகே பலத்த காற்றால் நாட்டுப்படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த 7 மீனவர்களை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். சம்பவம் தொடர்பாக மீன்வளத்துறை மற்றும் கடலோர பாதுகாப்புக் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published on: August 2, 2026 at 2:27 pm

தூத்துக்குடி, ஆகஸ்ட் 2, 2026: தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த சுகிர்தன் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகு, 7 மீனவர்களுடன் இரண்டு நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றது. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) புன்னக்காயல் – திருச்செந்தூர் இடையேயான கடற்பரப்பில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் திடீரென பலத்த காற்று வீசியதால், நாட்டுப்படகு நிலைதடுமாறி கடலில் கவிழ்ந்தது. இதையடுத்து சுகிர்தன் உள்ளிட்ட 7 பேரும் உடனடியாக கடலில் குதித்தனர்.

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு விசைப்படகில் இருந்த மீனவர்கள் கவனித்து, அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு தங்களது படகில் ஏற்றினர். இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இந்த படகு கவிழ்ந்த சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளும், கடலோர பாதுகாப்புக் குழும (CSG) போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : திருநெல்வேலியில் அதிரடி ரெய்டு… 6.1 கிலோ கஞ்சா பறிமுதல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com