ஆளுநர் நிகழ்வில் வந்தே மாதரம் பாடலுக்கு முதல் உரிமை? மத்திய அரசின் 2026 பிப்ரவரி உத்தரவு என்ன?

Vande Mataram: 2026 பிப்ரவரி மாதத்தில் வெளியான வந்தே மாதரம் தொடர்பான மத்திய அரசின் உத்தரவு என்ன தெரியுமா?

Published on: July 28, 2026 at 6:33 pm

புதுடெல்லி, ஜூலை 28, 2026: இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடல் மற்றும் இசை தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் 2026 பிப்ரவரி மாதம் வெளியிட்டது.

இந்த வழிகாட்டுதல்களின் படி, தேசியப் பாடலும் (வந்தே மாதரம்) தேசிய கீதமும் (ஜன கன மன) இணைந்து நிகழ்த்தப்படும் நிகழ்வுகளில், முதலில் தேசியப் பாடலின் (வந்தே மாதரம்) அதிகாரப்பூர்வ வடிவில் உள்ள ஆறு சரணங்களும் முழுமையாக பாடப்பட வேண்டும். இது குடியரசுத் தலைவர் வருகை, தேசியக் கொடி ஏற்றம், ஆளுநர்களின் உரை மற்றும் பிற அரசு நிகழ்ச்சிகள் போன்ற முக்கிய தருணங்களில் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், அரசு விருது வழங்கும் விழாக்கள், அரசு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் மற்றும் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் வருகை தரும் நிகழ்வுகளில், அவர்களின் வருகைக்கும் புறப்படுதலுக்கும் தேசியப் பாடலின் முழுமையான வடிவம் இசைக்கப்பட வேண்டும். இதன் மூலம் தேசியப் பாடலின் மரியாதையும், அதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்படுகிறது.

மேலும், அகில இந்திய வானொலி (ஆகாஷ்வாணி) மற்றும் தொலைக்காட்சிகள் வழியாக குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் முன்பும் பின்னரும், தேசியப் பாடல் இசைக்கப்பட வேண்டும் என்று வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அணிவகுப்பின்போது தேசியக் கொடி கொண்டு வரப்படும் தருணங்களிலும் பாடல் இசைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த வழிகாட்டுதல்களில், தேசியப் பாடல் இசைக்கப்படும் நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் ‘கவன நிலை’ (attention posture) யில் நேராக நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தேசியப் பாடலின் போது அனைவரும் ஒருமித்த மரியாதையுடன் நிற்கும் சூழலை உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வெளுத்து வாங்கிய கனமழை.. திடீர் வெள்ளக்காடாய் காட்சியளித்த டெல்லி!

சி.ஜே.பி போராட்டம் நம்பிக்கை அளிக்கிறது.. இந்திய இளைஞர்களுக்கு துணை நிற்கிறேன்.. கிரேட்டா தன்பெர்க்!
Greta Thunberg

சி.ஜே.பி போராட்டம் நம்பிக்கை அளிக்கிறது.. இந்திய இளைஞர்களுக்கு துணை நிற்கிறேன்.. கிரேட்டா தன்பெர்க்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com