இந்தியா – ருமேனியா உறவில் புதிய அத்தியாயம்… 3 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து!

Draupadi Murmu Romania Visit: இந்தியா – ருமேனியா இடையே அறிவியல், தொழில்நுட்பம், கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருதரப்பு வர்த்தகத்தை 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Published on: July 24, 2026 at 8:49 pm

புகாரெஸ்ட், ஜூலை 24 2026: இந்தியா மற்றும் ருமேனியா இடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ருமேனிய தலைநகர் புகாரெஸ்ட் நகரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் ருமேனிய அதிபர் நிகுஷோர் டான் ஆகியோர் நடத்திய உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியா – ருமேனியா இடையே கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் மக்களுக்கிடையேயான நெருக்கமான உறவை அடிப்படையாகக் கொண்ட நட்பு தொடர்கிறது. இந்த கூட்டுறவு தற்போது அதிக இலக்குகள், விரிவான ஒத்துழைப்பு மற்றும் எதிர்காலத்திற்கான பொதுவான பார்வையுடன் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை அடுத்த மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய (EU) சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொழில் நிறுவனங்கள் மற்றும் திறமையான நிபுணர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

மேலும் உற்பத்தி, மருந்துத் தொழில், சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், வேளாண்மை, உர உற்பத்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

ருமேனிய அரசுமுறை பயணத்தில் உள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று ருமேனிய பிரதமர் இலியே போலோஜன் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும், இந்தியா–ருமேனியா தொழில் மன்றத்தில் உரையாற்றுவதுடன், ருமேனிய நாடாளுமன்றத் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

மேலும் அவர், அறியப்படாத வீரரின் கல்லறையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார். புகாரெஸ்ட் பொருளாதாரக் கல்வி பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கிராம அருங்காட்சியகத்தையும் பார்வையிட உள்ளார்.

இதையும் படிங்க “எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடரும் வரை ஒத்துழைப்பு இல்லை”… ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

“எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடரும் வரை ஒத்துழைப்பு இல்லை”… ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி! India vs Pakistan

“எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடரும் வரை ஒத்துழைப்பு இல்லை”… ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com