K Veeramani: “72 நாள்களில் ஆளுங்கட்சியின் சாதனைகள் என்ன?” என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வியெழுப்பியுள்ளார்.
K Veeramani: “72 நாள்களில் ஆளுங்கட்சியின் சாதனைகள் என்ன?” என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வியெழுப்பியுள்ளார்.

Published on: July 23, 2026 at 2:49 pm
சென்னை, ஜூலை 23, 2026: ஆளும் த.வெ.க.வின் கடந்த 72 நாள்கள் ஆட்சி பாராட்டத்தக்கதாக இல்லை. ஆளும் கட்சிப் பிரமுகர்களின் அத்துமீறல்கள், தரம் தாழ்ந்த பேச்சுகள் – மக்கள் மத்தியில் வெறுப்பைத்தான் விதைத்து வருகின்றன. இடைத்தேர்தலில் அதனை ஆளும் கட்சி சந்திக்க நேரிடும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அறிக்கையில், த.வெ.க. தலைமையில் ஒரு கூட்டணி அரசு அமைந்து 72 நாட்கள் ஆகின்றன. இத்தனை நாட்களில் இந்த அரசின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை – ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. என்ன வாக்குறுதியை அளித்து 108 இடங்களைப் பிடித்ததோ, அவற்றை நிறைவேற்றுவதற்கான எந்த முன்னெடுப்பையும் அரசு எடுத்ததாகத் தெரியவில்லை.
மாறாக, ஆட்சியைத் தக்க வைப்பதற்காகக் குதிரை பேரமும், கட்சிகளை உடைத்தல், கட்சிகளைக் கலைத்தல், பிற கட்சி எம்.எல்.ஏ.க்களைப் பதவி விலகச் செய்து தங்கள் கட்சியில் இணைத்துக்கொள்ளல், இவை தவிர, எதிர்க்கட்சிகளின் மீதான அடக்குமுறையும், கருத்துரிமைப் பறிப்புமே அன்றாட நடப்புகளாகிவிட்டன” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சரின் முகம் சுழிக்க வைக்கும் பேச்சுகள் என்றும் கி. வீரமணி விமர்சித்துள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன் கைது, சிவசங்கரிடம் விசாரணை போன்றவற்றிற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோ ரூ.30 வரை உயர்வு.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com