குளியலறையில் உள்ள பல்ப் ஹோல்டருக்குள் கேமரா பொருத்தி இளம்பெண்ணை படம்பிடித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
குளியலறையில் உள்ள பல்ப் ஹோல்டருக்குள் கேமரா பொருத்தி இளம்பெண்ணை படம்பிடித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
Published on: September 24, 2024 at 6:25 pm
Sexual abuse case in Delhi | டெல்லியில் உள்ள ஷகார்பூர் பகுதியில் பெண் ஒருவர் வாடகை வீட்டில் வசித்துவந்தார். இவரின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டின் சாவியை உரிமையாளரிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார். இந்த சாவியை வீட்டு உரிமையாளரின் மகன் எடுத்து அந்த வீட்டை பயன்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் மார்க்கெட்டில் எளிதாக கிடைக்கும் உளவு கேமராக்கள் 3-ஐ வாங்கி, அதனை ஹால், பெட்ரூம் மற்றும் குளியலறையில் உள்ள பல்ப் ஹோல்டரில் பொருத்தியுள்ளார்.
இதற்கிடையில் டெல்லி திரும்பிய அந்தப் பெண் வீட்டில் சில மாறுதல்கள் இருந்தது போல் உணர்ந்தள்ளார். தொடர்ந்து, இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளருக்கு வாட்ஸ்அப் மூலமாக புகாரை பதிவு செய்தார்.
இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் வீட்டில் 3 இரகசிய உளவு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வீட்டின் உரிமையாள் மகனான கரண்-ஐ (30) கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க :மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம்: 72 ஸ்பாக்களுக்கு சீல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com