ஆகஸ்ட் 5-ல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்.. சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

TN Budget: தமிழ்நாடு அரசின் 2026–27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். இதற்கான கூட்டத் தொடரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.

Published on: July 21, 2026 at 1:21 pm

Updated on: July 21, 2026 at 1:22 pm

சென்னை, ஜூலை 21, 2026 : தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத் தொடரில், மாநில அரசின் 2026–27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த அவர், தமிழக சட்டசபையில் ஆகஸ்டு 5-ந் தேதி காலை 10 மணிக்கு 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாள் நடந்துவது என்பது குறித்து ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால் பட்ஜெட் கூட்டத் தொடரில் மாநிலத்தின் நிதிநிலை, புதிய நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, வேளாண்மை, கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, அதன்மீது பொதுவிவாதம் நடைபெறும். தொடர்ந்து ஒவ்வொரு துறைக்கும் மானியக் கோரிக்கைகள் மீது உறுப்பினர்கள் விவாதம் நடத்தி, அதற்கான பதிலை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வழங்க உள்ளனர்.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு மக்கள் நலப் பிரச்சினைகள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக தங்களது கருத்துகளை முன்வைக்கத் தயாராகி வருகின்றன.

இதையும் படிங்க : மார்க்கண்டேயன் சர்ச்சைப் பேச்சு; நடவடிக்கை கோரி அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தல்

 காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம்.. மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதியோம்.. அமைச்சர் விஸ்வநாதன்! Minister Viswanathan on Mekedatu

 காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம்.. மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதியோம்.. அமைச்சர் விஸ்வநாதன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com