MK Stalin: த.வெ.க. அரசு விமர்சனங்களை கிரிமினல் சட்டப்பிரிவுகள் மூலம் அடக்க முயற்சிப்பதாகக் கூறி, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
MK Stalin: த.வெ.க. அரசு விமர்சனங்களை கிரிமினல் சட்டப்பிரிவுகள் மூலம் அடக்க முயற்சிப்பதாகக் கூறி, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Published on: July 21, 2026 at 3:09 pm
சென்னை, ஜூலை 21, 2026 : முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், ஆட்சிக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்களை கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது தி இந்து நாளேட்டின் இன்றைய தலையங்கம்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது @The_Hindu நாளேட்டின் இன்றைய தலையங்கம்.
— M.K.Stalin (@mkstalin) July 21, 2026
நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும்… https://t.co/MDtwEdbL8J
மேலும், “நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்ல வேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது” என்றும், “ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால், மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்” என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ 2 வது மாநில மாநாடு.. எங்கு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com