கொலை வழக்கில் மகனை காப்பாற்ற முயன்ற தாய்க்கு சிறை… இங்கிலாந்து நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

UK Crime: இங்கிலாந்தில் இளைஞர் கொலை வழக்கில், தனது மகன் பயன்படுத்திய கொலை ஆயுதத்தை சம்பவ இடத்திலிருந்து அகற்றி விசாரணைக்கு இடையூறு செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிரண் கௌருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Published on: July 18, 2026 at 8:29 pm

லண்டன், ஜூலை 18, 2026: இங்கிலாந்தின் சவுத்‌ஹாம்ப்டன் கிரவுன் நீதிமன்றம், கொலை வழக்கில் குற்றவாளியான தனது மகன் பயன்படுத்திய ஆயுதத்தை சம்பவ இடத்திலிருந்து அகற்றி விசாரணைக்கு இடையூறு செய்ததாக இந்தியாவில் பிறந்து பின்னர் இங்கிலாந்தில் குடியேறிய கிரண் கௌர் (53) என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. குற்றவாளிக்கு உதவியதாக (Assisting an Offender) அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில், விக்ரம் டிக்வா (23), கடந்த 2025 டிசம்பர் 3-ஆம் தேதி 18 வயதான ஹென்றி நோவாக் (Henry Nowak) என்பவரை கத்தியால் குத்திக்கொலை செய்தார். இந்தக் கொலை வழக்கில் கடந்த மாதம் விக்ரம் டிக்வாவுக்கு குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை அவரது தாய் கிரண் கௌர் சம்பவ இடத்திலிருந்து அகற்றி வீட்டிற்கு எடுத்துச் சென்று மறைத்தது விசாரணையில் உறுதியானது.

தீர்ப்பின் போது நீதிபதி வில்லியம் மௌஸ்லி, சிக் மதத்தில் கிர்பான் என்பது மத நம்பிக்கையின் அடையாளமாக அணியப்படும் ஒரு சடங்கு கத்தி மட்டுமே; தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படுவதற்கான சட்டப்பூர்வ அல்லது மதரீதியான நியாயம் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். பொறுப்புள்ள பெற்றோராக மகனை சரணடைய அறிவுறுத்த வேண்டிய நிலையில், ஆதாரத்தை மறைக்க முயன்றது மிகக் கடுமையான குற்றம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இந்த வழக்கில் விக்ரம் டிக்வாவின் தந்தை மோகா சிங் மற்றும் சகோதரர் குர்ப்ரீத் மீது குற்றவாளிக்கு உதவியதாக தொடரப்பட்டுள்ள வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இதையும் படிங்க : அமெரிக்க தேர்தலில் சீனா தலையீடு.. டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் இந்தியா… 2028-29 உறுப்பினர் பதவிக்கான பிரசாரத்தை தொடங்கிய ஜெய்சங்கர்!
UNSC 2028

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் இந்தியா… 2028-29 உறுப்பினர் பதவிக்கான பிரசாரத்தை தொடங்கிய

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com