20 நாள் உண்ணாவிரதம் எதிரொலி… போராட்டத்தின் நடுவே மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சோனம் வாங்சுக்; டெல்லியில் பரபரப்பு

Wangchuk Fast: டெல்லி ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாக காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல்நலக் குறைவு காரணமாக வலுக்கட்டாயமாக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

Published on: July 18, 2026 at 12:46 pm

புதுடெல்லி, ஜூலை 18 2026: NEET தேர்வுகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராகவும், கல்வி அமைப்பில் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலரும் கல்வி சீர்திருத்தவாதியுமான சோனம் வாங்சுக், உண்ணாவிரதத்தின் 21-வது நாளைத் தொடர்ந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சனிக்கிழமை காலை டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

டெல்லி உயர் நீதிமன்றம் முன்பாக, வாங்சுக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தினமும் கண்காணித்து, அவசியம் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் தலையிடலாம் என்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இன்று மருத்துவக் குழுவின் பரிந்துரையின் பேரில், போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அதிகாரப்பூர்வ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வாங்சுக் ஆதரவாளர்கள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அவரை கட்டாயமாக அங்கிருந்து அழைத்துச் சென்றதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து ஜந்தர் மந்தர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும், ஜூலை 20-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள பேரணியும் நடைபெறும் என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த டெல்லி போலீசார், சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அமைதியான முறையில் அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 19 நாள் தொடர் உண்ணாவிரதம்.. எப்படி இருக்கிறார் சோனம் வாங்சுக்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com