Anbumani Ramadoss: “தமிழ்நாட்டில் உணவகத்துடன் குடிப்பகம் இணைந்த ரெஸ்டோ பார் திட்டம் தேவையில்லை” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: “தமிழ்நாட்டில் உணவகத்துடன் குடிப்பகம் இணைந்த ரெஸ்டோ பார் திட்டம் தேவையில்லை” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: July 17, 2026 at 2:55 pm
சென்னை, ஜூலை 17, 2026: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதைப் போன்று தமிழ்நாட்டிலும் உணவங்களுடன் குடிப்பகங்களும் இணைக்கப்பட்ட ரெஸ்டோ பார்களை அமைக்க உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பெரும் கேட்டை விளைவிக்கும் திட்டம் குறித்த இந்த செய்திகள் உண்மையா? என்பதை அரசு விளக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழ்நாட்டில் தற்போது 3 நிலைகளில் மது குடிப்பகங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அரசு மதுக்கடைகளுடன் இணைந்த குடிப்பகங்கள் HL 1 என்ற உரிமத்துடனும், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரிலான குடிப்பகங்கள் HL2 என்ற உரிமத்துடனும், நட்சத்திர விடுதிகளில் உள்ள குடிப்பகங்கள்HL3 என்ற உரிமத்துடனும் இயங்கி வருகின்றன. இவை அனைத்திலும் கடுமையான விதிமீறல்களும், சட்டவிரோத மது விற்பனையும் நடைபெற்று வருவதால் அவற்றை மூட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், நலவாழ்வு ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் கூடுதலாக ரெஸ்டோ பார்களை அனுமதிக்கவும், அவற்றுக்காக HL3A என்ற உரிமத்தை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதும் பிற்போக்குத்தனமான செயல்களாகும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து, “ஆட்சியாளர்களின் நோக்கம் மதுவை ஒழிப்பதாகத் தான் இருக்க வேண்டும். மதுவிலக்குத் துறையில் செய்யப்படும் சீர்திருத்தங்களும் அவற்றை நோக்கியதாகவே இருக்க வேண்டும். மாறாக, அதிக வசதிகளுடன் ரெஸ்டொ பார்களை திறப்பது, வெளிமாநிலங்களில் இருந்து புதிய மது வகைகளை வாங்கி வினியோகம் செய்வது தமிழ்நாட்டில் மதுப்புழக்கத்தை அதிகரிக்கவே செய்யும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், “சமூகக் கேடுகளையும், புதிய குடிகாரர்களையும் உருவாக்கும் ரெஸ்டொபார்களை அமைப்பதற்கு உரிமம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மக்களுக்கு கேடான இந்தத் திட்டத்திற்கு எதிராக சட்ட மற்றும் அரசியல் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு.. இன்று தொடக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com