பிரசாந்த் கிஷோர் சொத்து மதிப்பு தெரியுமா? கேட்டால் தலை சுற்றும்..!

Prashant Kishor: பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு, ₹198 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தேர்தல் பிரமாணம் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: July 16, 2026 at 4:06 pm

பாட்னா, ஜூலை 16, 2026: பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ₹198 கோடி மதிப்பிலான சொத்துகளை அறிவித்துள்ளார். இதில் அவரது சொந்தச் சொத்துகள், மனைவி ஜானவி தாஸ் மற்றும் சார்ந்தவரின் சொத்துகள் அடங்கியுள்ளன.

பிரசாந்த் கிஷோர், பீஹாரின் பாங்கிபூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வகையில் தனது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில் மொத்த சொத்து மதிப்பு ₹198 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் ₹111.78 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதில், ரொக்கப் பணம், வங்கி வைப்பு, பங்குகள், காப்பீடு மற்றும் நகைகள் வருகின்றன.

இதுதவிர ₹86.29 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகவும் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். இதில் குறிப்பிட்டு சொல்லப்போனால், பிரசாந்த் கிஷோர் சொந்தச் சொத்துகள் ₹96.06 கோடி மதிப்புடையவை ஆகும். அவரது மனைவி ஜானவி தாஸ், ஒரு மருத்துவர் ஆவார். அவரிடம், ₹101.93 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இவர்களின் குழந்தை டைபிக் பரத்வாஜ்- ஜிடம் ₹7.19 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

எது எப்படியோ, பிரசாந்த் கிஷோர் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கும் நிலையில், அவரது சொத்து மதிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது, அவர் அரசியல் வியூக நிபுணராக இருந்த காலத்தில் பெற்ற வருமானம் மற்றும் முதலீடுகளின் அளவை வெளிப்படுத்துகிறது.

இதையும் படிங்க : 19 நாள் தொடர் உண்ணாவிரதம்.. எப்படி இருக்கிறார் சோனம் வாங்சுக்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com