TENKASI POWER CUT : தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், ஜூலை 16-ஆம் தேதி பல்வேறு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது.
TENKASI POWER CUT : தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், ஜூலை 16-ஆம் தேதி பல்வேறு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது.

Published on: July 15, 2026 at 1:16 pm
தென்காசி, ஜூலை 15 2026: தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, ஜூலை 16 (வியாழக்கிழமை) மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை அமல்படுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகர சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை (16.7.2026, வியாழக்கிழமை) கடையநல்லூர் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை (16.7.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
அதன்படி கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊர் மேல் அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம்பேட்டை, கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்… அதிகாரிகள் விசாரணை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com