124-வது பிறந்தநாள்: பெருந்தலைவர் காமராஜருக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை

Kamaraj on 124th Birth Anniversary: பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Published on: July 15, 2026 at 11:47 am

Updated on: July 15, 2026 at 11:57 am

சென்னை, ஜூலை 15 2026: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் மரியாதையுடன் கொண்டாடப்படுகிறது.

கல்வி வளர்ச்சி, கிராமப்புற முன்னேற்றம் மற்றும் எளிமையான அரசியல் பண்பால் மக்களின் மனதில் நிலையான இடம்பிடித்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் அவரது சிலைகள் மற்றும் உருவப்படங்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதையொட்டி, சென்னை அண்ணா சாலையில் பல்லவன் இல்லம் எதிரே அமைந்துள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சர் விஜயைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்ரவர்த்தி, அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் காமராஜர் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அரசு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : ‘சென்னை மக்கள் மாற்றத்தை உணர வேண்டும்’… மாநகராட்சி ஆணையருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்
Perambur MLA Office

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com