இந்தியா முழுக்க அரை கம்பத்தில் பறந்த தேசிய கொடிகள்.. ஏன் தெரியுமா?

National flags flew at half-mast : இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்தது.

Published on: July 13, 2026 at 5:23 pm

புதுடெல்லி, ஜூலை 13, 2026: கத்தாரின் முன்னாள் அரசர் மற்றும் “நாட்டின் தந்தை” என போற்றப்பட்ட ஷேக் அகமது பின் கலீஃபா அல் தானி மறைவையொட்டி, இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக, தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. அவரது திடீர் மறைவு, உலகளாவிய அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

1995 முதல் 2013 வரை 18 ஆண்டுகள் கத்தாரை ஆட்சி செய்த ஷேக் அகமது, அந்நாட்டின் நவீன வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர். எரிசக்தி வளம் மிக்க வளைகுடா நாட்டை, உலகளாவிய முக்கிய மையமாக மாற்றியதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை அவர் முன்னெடுத்தார்.

மேலும், இந்தியா-கத்தார் இடையேயான உறவை வலுப்படுத்துவதிலும் அவர் பெரும் பங்களிப்பு செய்தார். கத்தாரை எண்ணெய் மற்றும் எரிவாயு வளமிக்க நாடாக உலக அரங்கில் முன்னிறுத்தியவர் என்றும் குறிப்பிடப்படுகிறார். 2013 ஆம் ஆண்டு, தனது மகனும் தற்போதைய அமீருமான ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கு ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார்.

74 வயதில் அவர் காலமானதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது. அவரது மறைவுக்காக கத்தாரில் நான்கு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த மறைவு, கத்தாரின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் ஒரு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க : அயோத்தி நன்கொடை கையாடல்.. அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com