சென்னை, ஜூலை 13, 2026: தெற்கு ரயில்வே, பண்டிகைக் காலத்தில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் – கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் (06117/06118) ஆகஸ்ட் 13, 15, 20, 22, 27, 29 மற்றும் செப்டம்பர் 03, 05 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படுகின்றன.
மறுமார்க்கத்தில், ஆகஸ்ட் 14, 16, 21, 23, 28, 30 மற்றும் செப்டம்பர் 04, 06 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சேவை வழங்கப்படும்.
இந்த ரயில்கள் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திரிச்சூர், அலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம் போன்ற முக்கிய நிலையங்களில் நின்று செல்லும். இதனால், பயணிகள் தங்கள் இடங்களுக்கு எளிதில் செல்லும் வசதி கிடைக்கும்.
மேலும், எர்ணாகுளம் – பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் (06147/06148) ஆகஸ்ட் 09, 16, 23, 30 மற்றும் செப்டம்பர் 06 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. மறுமார்க்கத்தில், ஆகஸ்ட் 10, 17, 24, 31 மற்றும் செப்டம்பர் 07 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அலுவா, திரிச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
திருவனந்தபுரம் வடக்கு – மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் (06093/06094) ஆகஸ்ட் 12, 19, 26 மற்றும் செப்டம்பர் 02 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. மறுமார்க்கத்தில், ஆகஸ்ட் 13, 20, 27 மற்றும் செப்டம்பர் 03 ஆகிய தேதிகளில் மங்களூருவில் இருந்து இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்கள் வர்க்கலா, கொல்லம், காயங்குளம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன் போன்ற நிலையங்களில் நின்று செல்லும். மேற்கண்ட அனைத்து சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயணிகள் IRCTC இணையதளம் அல்லது தெற்கு ரயில்வே சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க : 1.5 லட்சம் இளைஞர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்