Sivaganga: சிவகங்கையில் போலீசுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sivaganga: சிவகங்கையில் போலீசுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: June 14, 2026 at 1:24 pm
சிவகங்கை, ஜூன் 14, 2026: சிவகங்கை மாவட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் 30 வயது பெண் காவலர், ஜூன் 11 இரவு பணி முடிந்தபின் தனது ஆண் நண்பரைச் சந்திக்கச் சென்றார். அப்போது அந்த நபர் தனது நண்பர்கள் இருவரையும் அழைத்துள்ளார். மூவரும் சேர்ந்து பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அவர்களிடமிருந்து தப்பிய பெண் காவலர் உடனடியாக 100 என்ற காவல் உதவி எண்ணுக்கு அழைத்து தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரோந்து போலீசார், அவரை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், சிவகங்கை எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவின் பேரில் துணைக் காவல் கண்காணிப்பாளர் அமல அட்வின் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரீஸ்வரி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், மானாமதுரை அருகே தூதை கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராபின் (28), சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த மகாராஜா (29), ஹரிஸ் (21) ஆகியோர் குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானது. உடனடியாக மூவரையும் கைது செய்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண் காவலரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சமீபத்தில் முதலமைச்சர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். இத்தகைய சூழலில், ஒரு பெண் காவலருக்கே பாலியல் தொல்லை சம்பவம் நேர்ந்திருப்பது, போலீசாருக்கே பாதுகாப்பு இல்லையா என்ற அச்சத்தை மக்களிடையே எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க : தேனி பெரியகுளத்தில் 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.. காய்ச்சல் காரணமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com