M K Stalin criticism of Vijay : பாரதிய ஜனதா கட்சியின் ஜெராக்ஸ் போன்று விஜய் செயல்படுகிறார் என தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
M K Stalin criticism of Vijay : பாரதிய ஜனதா கட்சியின் ஜெராக்ஸ் போன்று விஜய் செயல்படுகிறார் என தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Published on: June 13, 2026 at 8:07 pm
சென்னை, ஜூன் 13, 2026: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
முன்னதாக, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், தவெக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் கனிமொழி விமர்சித்தார். மேலும், திமுக ஆட்சியின் சாதனைகள் காரணமாகவே தமிழ்நாட்டில் பெண்கள் வேலை வாய்ப்பில் முன்னேற்றம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மு.க.ஸ்டாலின் தனது உரையில், திமுக பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படும் என்றும், தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம் என்றும் தெரிவித்தார். தேர்தலுக்கு முன்பு வாக்குறுதிகள் அளித்தும், தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மின்வெட்டு பிரச்சனைகள், விவசாயிகளின் கடன் தள்ளுபடி போன்ற பிரச்சனைகள் மக்களை கோபப்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
மேலும், ஆளும் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகி வருவதாகவும், இதுகுறித்து எந்த நீதி கிடைக்கவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். முதல்வர் விஜய், அதிமுக எம்எல்ஏக்களை ராஜிநாமா செய்ய வைத்து தனது கட்சியில் இணைத்திருப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயலாகும் என்றும், பாஜகவின் ஜெராக்ஸ் போன்று செயல்படுகிறார் என்றும் அவர் விமர்சித்தார்.
முதல்வர் விஜய், மாநில உரிமைகள் சார்ந்த எதுவாக இருந்தாலும் திமுக அரசு போட்டு தந்த ப்ளூபிரிண்ட் படிதான் செயல்பட முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். “இது சினிமா இல்லை; ஆட்சி நிர்வாகம்” என்பதை முதல்வர் உணர வேண்டும் என்றும், திமுக அரசின் பாலிசி நோட் போலவே அவரது உரைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற திமுக திட்டத்தை, 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் என மாற்றி பேசியிருப்பது ஈ அடிச்சான் காப்பி போலவே உள்ளது என்றும், இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். கட்சி என்பது தலை; ஆட்சி என்பது கிரீடம்; தலை இருந்தால் பீடத்தை எப்போது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம், ஆனால் கிரீடத்தை மட்டும் வைத்துக் கொண்டு தலையை தேட முடியாது என ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் மாம்பழ கூழ் தொழிற்சாலை.. எங்கு அமைகிறது? அமைச்சர் பேட்டி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com