Odisha police Suspend | ஒடிசா காவல் நிலையத்தில் பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Odisha police Suspend | ஒடிசா காவல் நிலையத்தில் பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Published on: September 21, 2024 at 11:47 am
Updated on: September 21, 2024 at 11:50 am
Odisha police Suspend | ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பணிபுரியும் ராணுவ அதிகாரி ஒருவர் தனது வருங்கால மனைவியுடன் மாலை நேரத்தில் ஓரிடத்தில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர்களை ஒரு கும்பல் இடைமறித்து கலாட்டா செய்துள்ளது. இதனால்அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த நிலையில் அங்குள்ள போலீசார் அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளனர். பெண்ணின் துப்படடாவை பிடுங்கி வருங்கால கணவரின் கைகளை கட்டியுள்ளனர். மேலும் அப்பெண்ணை மார்பில் எட்டி உதைத்துள்ளனர். அறை குறை ஆடையுடன் அவரை படம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் பூதாகரமான நிலையில், காவல் நிலையத்தில் பணிபுரிந்த 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சிஐடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க விமானப் படையில் பெண் அதிகாரிக்கு தொல்லை: காவல் நிலையத்தில் புகார்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com