Anbumani Ramadoss: “டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: “டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: June 12, 2026 at 7:02 pm
சென்னை, ஜூன் 12, 2026: “குறுவை பயிருக்கு காவிரியில் நீர் திறப்பு இல்லை” என்பதை சுட்டிக் காட்டியுள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்” என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12&ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டில் காவிரியில் தண்ணீர் திறக்கப் படவில்லை. இதனால் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அதனால் உழவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கான மாற்றுத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “இந்த நெருக்கடியான சூழலில் இருந்து உழவர்களைக் காப்பாற்றுவதற்காக, காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசிடம் நிதி உதவி பெற்று உழவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, மாநில அரசு அதிகாரிகள், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், விவசாயிகள் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்து இப்போதுள்ள சூழலில் உழவர்கள் குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்யலாமா? என்பது குறித்து ஆலோசனைகளை வழங்க வேண்டும்” எனவும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : மூகாம்பிகையை மனமுறுகி வேண்டிய விஜய்.. வைரல் வீடியோ
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com