ஒரே நாளில் மாறிய நிலவரம்.. தங்கம், வெள்ளி விலை உயர்வு.. இன்றைய நிலவரம் தெரியுமா?

Gold Rate Today : தங்கம் விலை நேந்று சரிவைச் சந்தித்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2400 உயர்ந்துள்ளது.

Published on: June 12, 2026 at 10:41 am

சென்னை, ஜுன் 12 2026: சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,500க்கும், 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவியது.

இன்றைய தங்கம் விலை

ஆனால், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,800க்கும், 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ரூ.1,10,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் ஏற்பட்ட இந்த உயர்வு நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூய தங்கத்தைப் பொறுத்தவரை, ஒரு கிராம் ரூ.15,055க்கும், ஒரு சவரன் ரூ.1,20,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் தேவை உள்ளிட்ட காரணிகள் தங்கத்தின் விலையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளி விலை

அதேபோல், வெள்ளி விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது. நேற்றைவிட கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,65,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க உங்க வங்கிக் கணக்கு ரூ.2 ஆயிரம் வந்ததா? பி.எம் கிஷான் பண வரவு எப்போது?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com