தங்கம் திடீரென மலிவு.. ஒரு சவரன் விலை ரூ.1.10 லட்சமாக சரிவு!

Gold rate today: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,200 குறைந்து விற்பனையாகிறது.

Published on: June 10, 2026 at 12:22 pm

Updated on: June 10, 2026 at 12:26 pm

சென்னை, ஜுன் 10 2026 : சென்னையில் ஒரு தங்கம் விலை நேற்றைய நிலவரப்படி கிராம் ரூ. 14,200க்கும், சவரன் ரூ. 1,13,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 400 குறைந்து, கிராம் ரூ. 13,800க்கும், 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ரூ. 1,10,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை சரிவு நகை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

24 கேரட் கொண்டதூய தங்கம் கிராம் ரூ. 15,055க்கும், ஒரு சவரன் ரூ. 1,20,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றம்

தங்கத்துடன் சேர்த்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. இன்று வெள்ளி கிராமுக்கு ரூ. 10 குறைந்து, கிராம் ரூ. 260க்கும் ஒரு கிலோ ரூ. 260,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை குறைவதால் சிறிய முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

எதிர்கால நிலை

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் இந்திய ரூபாயின் மாற்றங்கள் தங்கம், வெள்ளி விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது குறிதது நிபுணர்கள் கூறுகையில், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்னும் சில நாட்கள் மாறுபாடுகளுடன் இருக்கும் வாய்ப்பு உள்ளது. முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நகை வாங்குபவர்களுக்கு தற்போதைய விலை குறைவு சாதகமான நேரம் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : அட நம்ம காட்டுல மழை பெய்யுது.. முதலீட்டாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com